முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல் முறை எனக்கு அழுதிடத் தோன்றும் …ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழை யுண்டு மேகமில்லை

கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
விதையொன்று உயிர் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும்
காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும்
ஒரு விதை உயிர் கொண்டது ஆனால் இரு நெஞ்சி ல் வேர் கொண்டது

சலங்கையே கொஞ்சம் பேசு மௌனமே பாடல் பாடு
மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில்
கவிதை அரங்கேறும்

பாதையும் தூரம் நான் ஒரு பாரம்
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா
தந்தை தந்த உயிர் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன்
மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால்
முத்தத்துக்கோ நாள் குறித்தே

(முதல் முறை )

Watch “Ellorum Sollum Pattu – Marubadiyum” on YouTube

எல்லோரும் சொல்லும் பாட்டு

சொல்வேனே உன்னை பார்த்து

மேடையே வையகம் ஒரு மேடையே

வேஷம் அங்கெலாம் வெறும் வேஷமே

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து

நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான்நாமெலாம் பொம்மை என்று நாடகம் ஆட்டுகின்றான்

காவியம் போலொரு காதலை தீட்டுவான்

காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்

ரயில் ச்நேதமா

புயல் அடித்த மேகமா

கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
கோவலன் ராதை தன்னில் மாதவி வந்ததுண்டு

மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று

மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே

மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே

எது கூடுமோ

எது விலகி ஓடுமோ

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு