ஏழு ஸ்வரங்களுக்குள் 

படம் – அபூர்வராகங்கள்
பாடியவர் – வாணி ஜெயராம்
வரிகள் – கண்ணதாசன்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் – மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

 

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல் முறை எனக்கு அழுதிடத் தோன்றும் …ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழை யுண்டு மேகமில்லை

கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
விதையொன்று உயிர் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும்
காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும்
ஒரு விதை உயிர் கொண்டது ஆனால் இரு நெஞ்சி ல் வேர் கொண்டது

சலங்கையே கொஞ்சம் பேசு மௌனமே பாடல் பாடு
மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில்
கவிதை அரங்கேறும்

பாதையும் தூரம் நான் ஒரு பாரம்
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா
தந்தை தந்த உயிர் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன்
மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால்
முத்தத்துக்கோ நாள் குறித்தே

(முதல் முறை )

Watch “Ellorum Sollum Pattu – Marubadiyum” on YouTube

எல்லோரும் சொல்லும் பாட்டு

சொல்வேனே உன்னை பார்த்து

மேடையே வையகம் ஒரு மேடையே

வேஷம் அங்கெலாம் வெறும் வேஷமே

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து

நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான்நாமெலாம் பொம்மை என்று நாடகம் ஆட்டுகின்றான்

காவியம் போலொரு காதலை தீட்டுவான்

காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்

ரயில் ச்நேதமா

புயல் அடித்த மேகமா

கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
கோவலன் ராதை தன்னில் மாதவி வந்ததுண்டு

மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று

மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே

மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே

எது கூடுமோ

எது விலகி ஓடுமோ

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு

மாயா மாயா எல்லாம் மாயா

மாயா  மாயா  மாயா  எல்லாம்  மாயா 

சாயா  சாயா  சாயா  எல்லாம்  சாயா 

மாயா  மாயா  மாயா  எல்லாம்  மாயா 
சாயா  சாயா  சாயா  எல்லாம்  சாயா 

சந்தோஷி  சந்தோஷி  சந்தோஷி 
நீ  சந்தோஷம்  கொண்டாடும்  சந்நியாசி 

சந்தோஷி  சந்தோஷி  சந்தோஷி 
உன்  சந்தோஷம்  உன்  கையில்  நீ  யோசி 

பட்டும்  படாமலே 
தொட்டும்  தொடாமலே 

தாமரை  இல்லை  தண்ணீர்  போல்  நீ 
ஒட்டி  ஒட்டாமலிரு  (2)

வாசனை  இருக்கும்  வரையினில்  சிரிக்கும் 
பூக்களின்  கதை  தான்  பூமியில்  நமக்கும் 
உலகினில்  எதுவும்  நிரந்தரம்  இல்லை 
உறங்கிடும்  வரையில்  சுதந்திரம்  இல்லை 
அவனவன்  சொல்வான்  ஆயிரம்  சேதி 
அளப்பவன்  பேர்தான்  அரசியல்  வாதி 
அதுக்கென்ன  செய்ய  அது  அந்த  பதவியின்  வியாதி   
உனது  கை  கால்களே 
உதவும்  நண்பர்களே 
திரைகடல்  மேல  என்னை  துளியினை  போல் 
நீ  ஒட்டி  ஒட்டாமலிரு 

காற்றே  போ  காற்றே  போ 
என்  காதலனை  கண்டு  பிடி 
கண்ணீரில்  கண்ணீரில் 
நான்  வரைந்த  கடிதம்  படி 
மாயை  போல்  சாயை  போல் 
காதல்  உறவு  ஓர்  நாளும்  ஆவதில்லை 
உணர்வோடும்  உயிரோடும் 
வாழும்  அழகு  பொய்யாகி  போவதில்லை 
காற்றே  போ  காற்றே  போ 
என்  காதலனை  கண்டு  பிடி 

பட்டும்  படாமலே 
கொஞ்சம்  பரவாயில்லை 
தொட்டும்  தொடாமலே 
ஒருநாள்  இதமா  இல்லை 

தாமரை  இல்லை  தண்ணீர்  போல்  நீ 
ஒட்டி  ஒட்டாமலிரு 

தாமரை  இல்லை  தண்ணீர்  போல் 

நீ  என்னை  எண்ணாமல்  இரு 

சந்தோஷி  சந்தோஷி  சந்தோஷி 
நீ  என்னோடு  ஒன்றானால்  சம்சாரி 
சந்தோஷி  சந்தோஷி  சந்தோஷி 
நீ  தொட்டால்  நான்  பொன்னாவேன்  உன்  ராசி 

https://youtu.be/aEHXObGSN7M

அஞ்சலி

​முத்து முத்தாக பாடல்கள் குடுத்ததாலோ

இறைவனும் உன் பாடல் கேட்க ஆசை கொண்டு

இத்துணை சீக்கிரம் தன்னோடு இணைத்து கொண்டான்

மீளா துயிலில் இறைவனடி சேர்ந்த சிறந்த கவிஞனே

என் இதயம் கனத்த கண்ணீர் அஞ்சலி……